கரூர் விவகார!ம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் திமுக!..
தவெக தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரை காண பல்லாயிரம் மக்களும் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டணியில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு விஜய் அந்த சென்றதுதான் காரணம்.. குறிப்பாக அவர் அங்கு தாமதமாக சென்றது முக்கிய காரணம் என திமுகவினர் புகார் சொன்னார்கள்.. சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்வர் ஸ்டாலினும் தவெக தலைவர் தாமதமாக சென்றதே இந்த சம்பத்திற்கு காரணம் என்ன பேசினார். இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் 41 பேரின் உயிரிழப்புக்கு பின் அரசியல் சதி இருப்பதாக விஜய் நம்புகிறார்.. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூரில் காவல்துறை உதவியுடன் 41 பேரை திமுக கொன்று குவித்தது என பேசியிருந்தார். இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சிபிஐ விசாரணையை பாதிக்கும் செயல் என திமுக கண்டனம் தெரிவித்ததோடு அவரது பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்திருக்கிறதாம்.