புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (12:46 IST)

தலைமை பேச்ச மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ நீக்கம்! – திமுக அதிரடி!

திமுக தலைமையின் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதாக திமுக கடலூர் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக கூட்டணிகளுக்கு ஒதுக்கிய பகுதிகளில் திமுகவினரே நின்று வெற்றிபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் பலர் கட்சியின் உத்தரவையும் மீறி செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் கட்சி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பனை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்வதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எம்.எல்.ஏ ஐயப்பன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.