வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (17:44 IST)

பயணிகள் விமானத்தை அச்சுறுத்திய கத்தார் ராணுவ விமானம்

ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானம் ஒன்றை கத்தார் ராணுவம் இடைமறித்து அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகம் கூட்டணியில் உள்ள அரேபியா நாடுகள் கத்தார் மீது தீவிரவாதத்திற்கு துணை நிற்பதாக கூறி கடும் பொருளாதார தடை விதித்தது. கத்தார் விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானமானது பஹ்ரைன் வான் எல்லை வழியாக பறந்து சென்றுள்ளய்து. அப்போது கத்தார் ராணுவத்தின் போர் விமானம் ஒன்று மிக அருகாமையில் வந்து பின்னர் விலகிச் சென்றதாக ஐக்கிய அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் பயணிகள் விமானம் வேறு வழியின்றி பாதை மாறி செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. மேலும் இது சர்வதேச ஒழுங்குமுறையை மீறும் செயல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.