வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (10:21 IST)

விஞ்ஞான ஊழல் செய்த திமுக ஊழலை ஓழிக்கப் போகிறதா? - தமிழிசை காட்டம்

திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது, முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைக்கப்படும். அதன் பின் ஊழல் செய்த  அனைத்து அமைச்சர்களும் சிறையில் இருப்பார்கள் என தெரிவித்திருந்தார். மேலும், ஆளும் பாஜக அரசுக்கு துதிபாடும் அரசாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன்  “திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதன் முதலில் திமுக ஆட்சியில் அமர்ந்த பின்னரே அரசு நிர்வாகத்தில் ஊழல் அரங்கேறியது. விஞ்ஞான  பூர்வ ஊழல்வாதிகள் என சர்க்காரியாவிடம் சான்றிதழ் வாங்கிய திமுக ஊழலை ஒழிக்கப்போகிறதாம்?” என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.