வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (15:49 IST)

செல்லூர் ராஜூவுக்கு எதிராக தெர்மாகோலுடன் வந்த திமுக வேட்பாளர்! – மதுரையில் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளர் தெர்மாகோலுடன் வந்தது வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுகவில் சின்னம்மாள் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற சின்னம்மாள் மற்றும் திமுகவினர் கையில் தெர்மகோலில் அதிமுகவுக்க்கு எதிரான வாசகங்களுடன் வந்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூவை விமர்சிக்கும் வகையில் தெர்மகோலுடன் அவர்கள் வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.