செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (12:08 IST)

மீதமிருந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்! – பாஜக அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக மீதமுள்ள 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் தேசிய கட்சியான பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக பாஜக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தளி தொகுதியில் நாகராஜனும், உதகமண்டலம் தொகுதியில் போஜராஜனும், விளவங்கோடு தொகுதியில் ஆர்.ஜெயசீலனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.