வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (11:13 IST)

கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசே தரலாம்! – கடம்பூர் ராஜூ விமர்சனம்!

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு,உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.


 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் “தமிழக அரசின் பொது நிறுவனங்கள் குழு சார்பில் பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது அதன்படி நேற்று திருச்சியில் இந்த ஆய்வு நடைபெற்றது இன்று புதுக்கோட்டையில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது

திமுக அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்” என்று கூறினர்.

அதிமுக கள்ள கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு ”கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம், திமுகவின் குணமே அதுதான்,கள்ள உறவு என்பது திமுகவுக்கு கைவந்த கலை. சசிகலா விவகரத்தில நீதிமன்ற என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று பார்ப்போம் நீதிமன்றத்தின் தீர்ப்பு  அனைத்துமே எங்களுக்கு சாதகமாக இருக்கும்

பாஜக கூட்டணி விவகாரத்தில் அதிமுக உறுதியாக உள்ளது இது குறித்து ஏற்கனவே பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி விட்டார். அதேபோன்று அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் தற்போது திறந்து வைக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில்
”திருச்சியில் உள்ள காகித தொழிற்சாலை அதிமுக ஆட்சி காலத்தில் 22 மாதங்களில் தொடங்கப்பட்ட திட்டம் அந்த திட்டம் தான் இன்றும் செயல்பட்டு வருகிறது
இந்த நிறுவனத்திற்கு என்று சி எஸ் ஆர் நிதி உள்ளது இது தற்போது கரூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது இதனை பிரித்து திருச்சி மாவட்டத்திற்கு இந்த நிதியை ஒதுக்கி செயல்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.