1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (21:04 IST)

'ஃபீனிக்ஸ் பறவையானேன்' - அண்ணாமலைக்கு நன்றி கூறிய சூர்ய சிவா

annamalai-suriya siva
கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவா அதிமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் திடீரென அவரை அண்ணாமலை பாஜகவில் மீண்டும் சேர்த்துக் கொண்டதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பு வெளியானது.

இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘’ சூர்யா சிவா அவர்கள் தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் ‘’ என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சூர்ய சிவா தன் வலைதள பக்கத்தில் ‘’ஃபீனிக்ஸ் பறவையானேன்'' என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளதாவது:

‘’கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாட்டு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள் அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன்  அண்ணாமலை  அவர்களுக்கும், அண்ணன் கேசவ விநாயகம் அவர்களுக்கும் எனக்கு தோள் கொடுத்து நின்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதத்தாயின் முதல் மகன், தாய்நாட்டின் தலைமகன்,  பாரதத்தின் நிரந்தர பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களின் கனவினை நனவாக்க, திரு.அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்பதை இந்த தருணத்தில் என் உறுதி மொழியாகவே அளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.