வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (18:24 IST)

பாஜகவில் இருந்து விலகிய சூர்ய சிவா பிரபல கட்சியில் இணைய முடிவு?

tiruchy surya shiva
பாஜகவில் இருந்து விலகிய சூர்ய சிவா அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மா நில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் பேசசும்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என மாநில  பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.விசாரணைக்குப் பின்னர் சூர்ய சிவா மற்றும் டெய்சி இருவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

இதையடுத்து, சூர்ய சிவா, கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு  திருச்சி சூர்ய சிவாவை நீக்கி கடந்த ஆண்டு நம்பவரில் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பரில் சூர்ய சிவா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலைய சூர்ய சிவா, வரும் 5 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி  முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.