வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:32 IST)

தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு.. என்ன காரணம்?

ADMK
தஞ்சையில் நாளை நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தஞ்சையில் நவம்பர் 4ஆம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 52 வது தொடக்க விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெறும் என்றும் இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்திற்கு பதிலாக வரும் 16ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva