வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (16:31 IST)

2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதே எங்கள் இலக்கு: திண்டுக்கல் சீனிவாசன்

2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்குவதே  எங்களது இலக்கு என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  
 
அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட  நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவோம் என்றும் அதுதான் எங்களது இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ஓ பன்னீர்செல்வம் எதற்காக இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறார் என்று தெரியவில்லை என்றும் ஆனால் அவரது நாடகம் எங்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார்.  
 
மேலும் பசும்பொன்னில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷமிட்டது யார் என்று தெரியவில்லை என்றும் ஆனால் காவல்துறை எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran