திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (15:47 IST)

திமுக vs காங்கிரஸ்: உள்ளாட்சி தேர்தல் சீட்டு பஞ்சாயத்து..!!

உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பிரச்சனை எழுந்துள்ளதாக அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. 
 
உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.  இந்நிலையில்  காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீடு குறித்து கலைஞர் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
 
இதில் கொங்கு மாவட்டங்களில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். திமுக தொகுதிகளை விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக உள்ளதாம். எனவே அழகிரியும் சற்றும் இறங்காமல் பிடிவாதமாக உள்ளதாக என தெரிகிறது.