திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:00 IST)

’ரேப் இன் இந்தியா’ என பேசியதற்கு ...மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி

மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய கேரள வயநாடு எம்.பி. ராகுல் காந்தி ‘ரேப் இன் இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில்  'ரேப் இன் இந்தியா ’ என்று கூறியதற்கு தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மக்களவை கூட்டத்தில் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி ”நரேந்திர மோடி மேக் இன் இந்தியாவை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இதுபற்றி நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று கூறினார்.
 
ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு எதிராக பாஜக பெண் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தனர்.
 
இதனையடுத்து, ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.
 
நவம்பர். 18 ஆம் தேதி  தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ( மாநிலங்களவை , மக்களவை ) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதுகுறித்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது ;
 
டெல்லியில் வன்கொடுமையின் தலைநகரம் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும், ரேப் இன் இந்தியா என தான் பேசியதற்கு மன்னிப்ப் கேட்கபோவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.