திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2019 (11:29 IST)

உதயநிதி ஸ்டாலின் கைது..

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ததை தொடர்ந்து திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸாருக்கும் திமுகவிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.