1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK and Congress former MLAs joined in BJP

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த முன்னாள் திமுக, பாஜக எம்.எல்.ஏக்கள்!

பாஜக
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ காரணமாக இருந்த 5 எம்எல்ஏக்களில் இருவர் சற்றுமுன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் 
புதுவையில் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருந்த ஜான்குமார் மற்றும் திமுக எம்எல்ஏ வாக இருந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் சமீபத்தில் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
 
இதன் காரணமாக புதுவை முதல்வராக இருந்த நாராயணசாமியின் ஆட்சியை கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதுவைக்கு வந்த அமித்ஷா முன்னிலையில் ஜான்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இருவரும் பாஜக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஜக்கி வாசுதேவ்: "அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்"