தமிழ் கத்துக்கணும்னு ஆசை.. ஆனா முடியல! – மன் கீ பாத்தில் பிரதமர் வருத்தம்

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (12:25 IST)
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பேசி வரும் பிரதமர் மோடி தான் தமிழ் கற்க முடியாததை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன்மூலம் நாட்டு மக்களுடன் உரையாடும் பிரதமர் மோடி அவர்களது கருத்துகளையும் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் தனி சிறப்பு வாய்ந்தது. தமிழில் உள்ள இலக்கியங்கள் போற்றத்தக்கவை. நான் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டும் என்னால் முழுதாக அதை கற்க முடியவில்லை” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :