1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK and BJP to meet for constituency separation for election

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக!

TN Assembly Election 2021
சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை. 

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அதிமுக கூட்டணி பாஜக தொடர்கிறது என இரு கட்சிகளும் பரஸ்பரம் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. 
 
இன்று காலை 8.30 மணிக்கு துவங்கும் இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி குறித்த முடிவு இழுபறி இல்லாமல் சுமூகமாக எட்டப்படும் என நம்பப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை!