1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (12:50 IST)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு: திமுக, அதிமுக தொண்டர்கள் கல்லெறிந்து மோதல்!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் குறித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை கூறினார். ஒரு சில இடங்களில் அவர் உதயநிதியை ஒருமையில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து ராஜபாளையத்தில் திமுக தொண்டர்கள் திடீரென அதிமுகவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அதிமுக திமுக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என்றும் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து திமுக அதிமுகவினர் கல் வீசி தாக்கிக் கொண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு கட்சி தொண்டர்களையும் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த கல்வீச்சு தாக்குதலில் பொதுமக்களில் சிலரும் அதிமுக திமுக தொண்டர்கள் சிலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது