நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய ஜெயலலிதா - முன்னணி நடிகை புகழாரம்

jayalalitha
Sinoj| Last Updated: சனி, 5 டிசம்பர் 2020 (22:47 IST)

உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா என பிரபல நடிகை கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் இன்று அவரது 4 வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

எனவே பாலிவுட்டின் பிலபல நடிகையும் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்துவருபவருமான கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :