வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (11:10 IST)

தடுத்து நிறுத்திய போலீஸர்: சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுகவினர்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். 
 
மத்திய அரசின் வேளண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 5 ஆம் தேதி கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று திமுக சார்பில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 
 
மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் திமுகவினர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கருப்பு கொடி போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். 
 
ஓமலூர், அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் திமுகவினரி தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.