1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK Sudheesh meet Edappadi palanisamy

முதல்வரை சந்தித்த எல்.கே.சுதீஷ்: இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறதா?

அதிமுக
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் இரு தரப்பில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் இழுபறி இருந்தது 
 
இந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சற்றுமுன்னர் சந்தித்துள்ளார் 
 
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்னும் சில நிமிடங்களில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் நடித்த பிரபல நடிகர் பாஜகவில் இணைந்தார்!