1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 6 மார்ச் 2021 (12:13 IST)

கூவத்தூரில் நடந்தது என்ன? அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் பேட்டி!

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது
 
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூவத்தூரில் சசிகலா முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதா புகைப்படம் முன் சத்தியம் செய்தார்கள் என்றும் இதுவரை வெளிவராத தகவலை தெரிவித்துள்ளார்
 
மேலும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகம் முழுவதும் 84 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அதேநேரத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது என்றும் எங்கள் சமுதாய மக்கள் இல்லாமல் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்று கூறிய கருணாஸ் அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்தார் 
 
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்காமல் அரசு ஏமாற்றி விட்டது என்றும் கடைசி நிமிடம் வரை எங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து தடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்றும் ஆகையால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்