வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 6 மார்ச் 2021 (18:24 IST)

தேமுதிகவுக்கு 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என தகவல்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்த தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இழுபறியில் இருந்த அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் அதிமுக கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவின் பார்த்தசாரதி மற்றும் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கிளம்பி உள்ளதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது
 
தேமுதிகவுக்கு போட்டிகட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கியுள்ள நிலையில் தேமுதிக 15 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்