வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:20 IST)

தேர்தல் அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம்: விஜயகாந்த் கண்டனம்!

தேர்தல் அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம் இருந்தால் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
எவ்வித கால அவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
 
தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதில் இருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தமாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.