1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anna university semester exam postponed

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வு தேதி ஒத்திவைப்பு

அண்ணா பல்கலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தேதியில் தொடங்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. 
 
சமீபத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தற்போது மார்ச் 5, 6, 9 , 11 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
மத வெறுப்பை தூண்டினால் நடவடிக்கை – பாஜக வினோஜ் செல்வம் மீது வழக்கு!