1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (17:09 IST)

தேமுதிக பொதுக்குழு கூட்டம்- நடிகர் விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சளி அதிகமாக உள்ளதாகவும் சுவாசத்தில் சிரமம் ஏற்படுவதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அவர் விரைவில் குணமாக வேண்டி, சினிமாத்துறையினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்  பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில்  நடிகர் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக இன்று  மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து தேமுதிக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  வரும் 14 ஆம் தேதியன்று வியாழக்கிழமை காலை 8:45 மணியளவில் சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில், தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கலந்துகொள்கிறார். மேலும், பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் ஆக்கப் பணிகள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றவுள்ளதாக தகவல் வெளியாகிறது.