1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2023 (13:05 IST)

'அண்ணன் விஜயகாந்த் நலம்பெற பிரார்த்திக்கிறேன்'- சூர்யா

அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் மருத்துவமனை அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்,  நடிகர் விஜயகாந்த் விரையில் உடல்நலம் குணமடைய வேண்டும் என தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதுடன், கோயில்களில் சிறப்பு வழிபாடு  செய்து வருகின்றன.

அதேசமயம், விஜயகாந்த் குணமடைய வேண்டுமென  சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம்  கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த்  வீடியோ வெளியிட்டிருந்தார்.
vijayakanth family

இந்த நிலையில், நடிகர் சூர்யா தன் வலைதள பக்கத்தில், அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்! அவரை பூரண குணமாக்கி நலம்பெற வைக்கும்! என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கங்குவா படப்பிடிப்பின்போது காயமடைந்த சூர்யா அதிலிருந்து குணமடைந்து வரும் நிலையில், ஓய்விற்காக மும்பை சென்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.