திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (13:54 IST)

விஜயகாந்த் பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்- தேமுதிக அறிவிப்பு

பிரபல நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என  தேமுதிக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து தேமுதிக  தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

‘’தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் ‘’ என்று தெரிவித்துள்ளது.