1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (21:48 IST)

'கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்'- பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு

vijayakanth family
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்,  நடிகர் விஜயகாந்த் விரையில் உடல்நலம் குணமடைய வேண்டும் என தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதுடன், கோயில்களில் சிறப்பு வழிபாடு  செய்து வருகின்றன.

அதேசமயம், விஜயகாந்த் குணமடைய வேண்டுமென  சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரையில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவர். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம். நம்பவும் வேண்டால் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைகு பேரி கார்டுடன் போலீஸார்  இன்று பாதுகாப்பிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.