தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது
- கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?
- கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!
மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?
கள்ளச்சாராய வேட்டைக்காக சென்ற ஏழு போலீசார் மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அவர்கள் திரும்பி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராய வேட்டை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் இந்த கள்ளச்சாராய வேட்டையில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார்களில் ஏழு பேர் திடீரென மாயமானதாக நேற்று தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த ஏழு பேரும் திரும்பி வந்துவிட்டனர்.
அவர்களிடம் செய்த விசாரணையில் ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்ததாகவும் அனைவரும் நலமாக இருப்பதாகவும் எனவே அவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
