1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (07:17 IST)

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது

Arrest
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராயம் மரணங்கள் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் விஷச்சாராயம் விற்றவர்கள், மெத்தனால் விற்றவர்கள் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக அய்யாசாமி மற்றும் தெய்வாரா ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று சிவக்குமார் மற்றும் கதிரவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களின் கைது எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva