தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!
- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?
- கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!
- குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!
- ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!
கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மாயமானவர்களை சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சம் அடைந்தனர். மாயமான 7 பேரும் திருச்சி பட்டாலியனை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
