தொடர்புடைய செய்திகள்
- அமித்ஷா இன்று சென்னை வருகை: கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?
- சுஷ்மா சுவராஜ் பிரதமர் பதவியை தட்டிப்பறித்த மோடி: ப.சிதம்பரம்
- ராமரே இருந்திருந்தாலும் பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
- ப. சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை
- சென்னையில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை
அமித்ஷா இன்று சென்னை வருகை: கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டனி விஷயத்தில் இரு கட்சிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று கள ஆய்வு செய்து பாஜகவின் நிலையை ஆய்வு செய்து வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகை தருகிறார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டாக மாற்றுவது என்பது குறித்து இன்று பாஜக தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்
சென்னை வரும் அமித்ஷாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் வரவேற்கின்றனர். அமித் ஷாவின் வருகை காரணமாக தமிழகத்தின் பாஜக தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
