1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:14 IST)

மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கனமழை காரணமாக  விருதுநகர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கூடுதலாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது