வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:26 IST)

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்? தினகரனின் திட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ, வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்காவிட்டால் தினகரனுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அது நடப்பது சாத்தியம் இல்லை

இந்த நிலையில் ஒருவேளை தொப்பி சின்னம் தனக்கு கிடைக்காவிட்டால் கிரிக்கெட் மட்டை அல்லது விசில் ஆகிய இரண்டு சின்னங்களை கேட்க தினகரன் திட்டமிட்டுள்ளாராம். கிரிக்கெட் மட்டை மற்றும் விசில் இரண்டுமே இளைஞர்களுக்கு பிடிக்கும் என்பதால் இந்த சின்னங்களை அவர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் தினகரன் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்றும், இரண்டாவது இடத்திற்கு திமுக மற்றும் தினகரன் போட்டி போடுவதாகவும் தெரிவித்துள்ளார்.