அதிமுகவின் அதிரடியால் 'தொப்பி' சின்னத்தை இழக்கும் தினகரன்
ஆர்.கே.நகரில் போட்டியிட இன்று வேட்புமனுதாக்கல் செய்துள்ள டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு சற்றுமுன்னர் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து ஆஜரான தேர்தல் அலுவலக வழக்கறிஞர், 'தினகரனுக்கு தொப்பி சின்னத்தை வழங்குவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வேறு சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தை கேட்டு கோரிக்கை விடுத்தால் தொப்பி சின்னம் தினகரனுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்' என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இதுவரை சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களில் மூவர் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் அதிமுக ஏற்பாடு செய்த சுயேட்சைகள் என்றும் கூறப்படுகிறது. எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது,.