செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:00 IST)

ஆர்.கே.நகர்: ஒரே நாளில் மனுதாக்கல் செய்யும் 3 முக்கிய வேட்பாளர்கள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் மீட்பேன் என்று கூறிய டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அதிமுகவின் கொடியான கருப்பு சிகப்பு வெள்ளை கொடியில் அண்ணா படம் இல்லாமல் உள்ள கொடியுடன் தொண்டர்களுடன் தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தலில் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் ஆர்.கே.நகர் தொகுதியின் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் ஆகியோர் மனுதாக்கல் செய்ய வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.