திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:09 IST)

தினகரனுக்கு 75 லட்சம், மதுசூதனனுக்கு 1.5 கோடி! இது என்ன கணக்கு தெரியுமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான மதுசூதனனும், சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனும் இன்று மனுதாக்கல் செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

டிடிவி தினகரனுக்கு பல கோடிகள் சொத்துக்கள் உள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தனது வேட்புமனுவில் வெறும் ரூ.74,17,807 மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையா சொத்துக்கள் ரூ.57,44,008 மற்றும் அசையும் சொத்துக்கள் 16,73,799 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மதுசூதனனுக்கு ரூ.1,49,53,941 சொத்துக்கள் இருப்பதாகவும் இவற்றில் அசையும் சொத்து ரூ.12,53,941 மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1,37,00,000 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.