புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (14:27 IST)

மதுசூதனன் செய்யாததை புத்திசாலித்தனமாக செய்த தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மற்றும் தினகரன் ஆகியோர் இன்று தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர்  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு டிடிவி தினகரன் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆனால் மதுசூதனன் எந்த நினைவிடங்களுக்கும் செல்லவில்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் அதிமுகவை வழிநடத்திய எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தாமல் நேராக வேட்புமனு தாக்கல் செய்ததை தினகரன் ஒரு பெரிய விஷயமாக பிரச்சாரத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரிய தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.,