1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran joint with thugs cutting hand Rajendabalaji

’’கையை வெட்டும் குண்டர்களுடன் தினகரன் கூட்டு’’ - ராஜேந்திர பாலாஜி

Dinakaran
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என  அதிமுக - அமமுகவும்  டெல்லி நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத அமமுக கட்சியினர் குறிப்பாக தினகரன் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று சாத்தூரில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
 
நாங்கள் அமமுகவை இன்னமும் பதிவு செய்யாமல் இருப்பதற்குக் காரணம் இரட்டை இலை சின்னத்தையும், அக்கட்சியையும் மீட்பதற்க்குத்தான். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரவுடி மாதிரி பேசுகிறார் என்று  தெரிவித்தார்.
 
மேலும் மெகா கூட்டணி குறித்து கூறியபோது, தனியாக போக பயந்தவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குக் கூட்டணி வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
சபாநாயகரின் கையை வெட்டுவோம் என்று பேசுபர்களை தன்னிடம் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து டிடிவி. தினகரன் ரவுடி என்று கூறுகிறார் என்று தெரிவித்தார்.