புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (21:59 IST)

இரட்டை இலை வழக்கு: மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் முடிவு

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி ஐகோர்ட், தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது சரியான நடவடிக்கையே என தீர்ப்பு அளித்து தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது
 
இதனையடுத்து உண்மையான அதிமுக நாங்கள் தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். 
 
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேலும் கூறியபோது, 'இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும், குக்கர் சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதின்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் ஒருவேளை குக்கர் சின்னமும் கிடைக்கவில்லை என்றால் அனைத்து தொகுதிகளிலும் சுயேட்சையாக நின்று, ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சின்னங்களில் நின்றாலும், வெற்றிபெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.