திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (14:55 IST)

இரட்டை இலை அதிமுகவுக்கே: தினகரன் மனு நிராகரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக பிளந்தது. பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால் தினகரன் தனி அணியாக பிரிந்தார். எனவே அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. இந்த நிலையில் தனி அணியாக இருந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்ததால், உண்மையான் அதிமுக இதுதான் என்ற வாதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் மீண்டும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. இந்த நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒரு வருடமாக நடந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது  இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கூறீயுள்ளது. ஓபிஎஸ் - ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் தரப்பில் இரட்டைஇலை சின்னம்  அதிமுகவுக்கு என தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 
 
மேலும் சசிகலா , டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இதனால் அதிமுகவினர் தம் மகிழ்சியை கொண்டாடி வருகின்றனர்.
 
வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள அதிமுகவுக்கு   இந்த  தீர்ப்பு  சாதகமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்றைய தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் அதாவது தினகரன் தரப்பினர் மற்றும் சசிகலா தரப்பினர் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது