இதை கூட செய்ய முடியாத அரசாங்கம் எதற்கு? திமுக எம்பி ஆவேச கேள்வி
சீனாவில் இருந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா டெஸ்டிங் கிட்ஸ் தவறான பரிசோதனை முடிவுகள் காட்டுகிறது என்பதால் புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை கொண்டு 2 நாள்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இது மத்திய நரேந்திர அரசாங்கத்தின் தோல்வி. 30 நாள் ஊரடங்கு பின் இப்பொழுது தான் சீனாவில் இருந்து கிட் வந்தது. ஆனால் கிட் தவறான பரிசோதனை முடிவுகள் காட்டுகிறது. இந்த அரசாங்கத்திற்கு ஒரு வேலை தான் உள்ளது. அது நாட்டு மக்களை காப்பாற்றுவது. அதை கூட செய்ய முடியாத அரசாங்கம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாரின் இந்த கேள்விக்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா விஷயத்திலும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்வதையே விரும்புகின்றனர் என்பதற்கு இந்த டுவீட் ஒரு எடுத்துக்காட்டு என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.