திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:52 IST)

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை !!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்டிருந்த மதுபானக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஷெட்டர்கள் வெல்டிங் அடித்து, சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஒரு கடையில் சீலை உடைத்து  நள்ளிரவில் கொள்ளையடித்துச் செல்லவதாக புகார் எழுந்தது. மேலும் , இங்கு கொள்ளையடித்துச் செல்வதை கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை எனற புகார் எழுந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.