1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rpid test kits fail in detecting corona

சைனா பீஸ்ல... சொதப்பிய ரேபிட் கிட்: அடுத்து என்ன??

ரேபிட் கிட்
சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட் தவறான முடிவுகளை முடிவுகளை காட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. ஆங்காங்கே நேற்றில் இருந்து சில தளர்வுகள் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரேபிட் பரிசோதனை கருவிகள் கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியா வந்தது. 
 
இந்த கருவிகள் மாநில வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டு கொரோனா சோதனையின் போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேபிட் கருவிகளின் முடிவுகள் மாறுபட்டதாக இருப்பதாக ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 
எனவே, இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash