வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:16 IST)

சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து முடிவு - முதல்வர்

சீனாவில் இருந்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா  வைரஸ் பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைத் தடுக்க, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து தொழில்களும் , தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
மாணவர்கள், கல்விநிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. அதேசமயம், 1 முதல்  9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார்.

பொதுத்தேர்வு எழுதிவந்த 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மீதித் தேர்வுகள் எப்பொழுது நடக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படுமென தமிழக கல்வித்துறை அறித்திருந்தது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், சூழ்நிலையை பொறுத்தே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்…நோயின் தன்மை பற்றி அறிந்து மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். இக்கட்டான நிலையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.