1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (16:22 IST)

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்ச்சி சதவிகிதம் எவ்வளவு தெரியுமா ?

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று 2:30 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 2 முதல் மார்சி 29 ஆம் தேதிவரை நடந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.
இந்நிலையின் இன்று சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.மாணவர்கள தம் தேர்வு முடிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள cbseresults.nic.in,cbse,nic.in,examresults.net, digilocker.gov.in  என்ற இணையதளங்களில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தம் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ.கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாண்டு 91.01 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.