ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (18:14 IST)

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா ?

சமீபத்தில் +2 பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியாகின. 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய தேர்வில் 94.5 %  தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனையடுத்து  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தம் மதிப்பெ பட்டியலையி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இதற்கு பிறந்த நாள் தேதி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சில தனியார் இணையதளங்களிலும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 
 
manabadi.com, indiaresults.com, மற்றும் examresults.net ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.