தவெகவுக்கு 80 சீட், விஜய்க்கு துணை முதல்வர் பதவி.. இறுதி ஆஃபரை அறிவித்ததா பாஜக?
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாரதிய ஜனதா கட்சிக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக-விற்கு 80 தொகுதிகளையும், தேர்தலில் வெற்றி பெற்றால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியையும் வழங்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் முதலமைச்சர் பதவியை குறிவைப்பதால் பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
விஜய்யின் பலமான ரசிகர் மன்ற வாக்கு வங்கியை தங்களது பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. ஒரு மாநிலத்தில் நிலவும் குறைந்த வாக்கு சதவீத வித்தியாசம் கூட ஆட்சியையே மாற்றும் என்பதால், விஜய்யின் வருகை தங்களுக்கு பெரிய பலமாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுகிறது.
இதற்காக பவன் கல்யாணை தூதராக பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், கட்சி தொடங்கிய ஆரம்பத்திலேயே தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் தவெக-வின் தனித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம் என்று விஜய்யின் ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பதில் விஜய் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.
Edited by Siva