1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Delta Plus Corona

டெல்டா பிளஸ் கொரோனா...

டெல்டா பிளஸ் கொரொனாவா
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருமாறி வரும் கொரொனாவான டெல்டா பிளஸ் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 4 மாநிலங்களில் மட்டும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
போலீஸார் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி